எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளைச் சமாளித்தல்

எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை நாம் ஏன் சமாளிக்கவேண்டும்?

உடல் நலன்  போல, நாம் முறையான உணவு முறையைக் கடைப்பிடிக்காவிட்டால்,  போதிய அளவ ஓய்வு பெறாவிட்டால் அல்லது உடற்பயிற்சி செய்யாவிட்டால், நாம் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைக் காண முடியும்.

மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளோமா என்பதை நம்மால் தெரிந்து கொள்ள  முடியாவிட்டால் அல்லது எண்ணங்கள் அல்லது உணர்ச்சிகளை அடையாளங்காண முடியாவிட்டால், “நோய்வாய்ப்பட” நாம் அனுமதிப்பதுடன் அது நம் சொந்த மன நலனைப் பாதிக்கவும் மோசமாக்கவும் செய்யும்.  

நடமாட்டக் கட்டுப்பாட்டின்போது (முடக்கம்) மன அழுத்தத்தைச் சமாளிப்பதற்கான சில எளிய யோசனைகள்

 • நெருக்கடியின்போது, கவலைப்படுவது, மன அழுத்தத்திற்கு ஆளாவது, குழப்பமடைவது, அச்சம்கொள்வது அல்லது ஆத்திரங்கொள்வது போன்றவை வழக்கம்தான்
 • தொலைபேசி வழி உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பில் இருங்கள் 
 • உண்மைகளையும்  தகவல்களையும் பெற நம்பிக்கையானவர்களை நாடுங்கள்  
 • சுறுசுறுப்பாக இருக்கும்பொருட்டு, ஓய்வு நேரங்களில் இதர நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.
 • உங்கள் மனதை ஈடுபடுத்த  https://sgmigrantcoalition.wixsite.com/home எனும் இணையத் தளத்திற்குச் சென்று நடவடிக்கைகளையும் விளையாட்டுக்களையும் கண்டறிந்துகொள்ளுங்கள்
 • கடந்த காலத்தில் நீங்கள் அனுபவித்த  சிரமமான சூழலை நினைத்துப்பாருங்கள். அதனை எப்படிச் சமாளித்தீர்கள்,  சமாளிக்கப் பயன்படுத்திய  திறன்களை இந்த நெருக்கடியின்போதும் பயன்படுத்த முடியுமா? 

இப்போது நடப்பது குறித்து நான் கவலைப்படுகிறேன். நான் என்ன செய்யலாம்?

உணர்ச்சிகளும்  எண்ணங்களும்   நம்மை எளிதாக பாதிக்கக்கூடியவை. நாம் பதற்றமாக இருக்கும் பொழுது,நாம் செய்யக்கூடிய ஒரு செயல்  நம் இதயத்துடிப்பை குறைத்துக்கொள்வதாகும்.  நம் இதயத்துடிப்பு அதிகரித்தால், நாம் மேன்மேலும் பதற்றத்திற்கு ஆளாவோம்.

மூச்சுப் பயிற்சிகள்

மூச்சுப் பயிற்சி உங்கள் இதயத்துடிப்பையும், பதற்றத்தையும் குறைக்க உதவுகிறது.

 1. நீங்கள் உட்கார்ந்து கொள்ள ஒரு நல்ல, வசதியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள். (எ.கா – உங்கள் படுக்கை, அல்லது தரை)
 2. நிமிர்ந்து உட்கார்ந்து, உங்கள் கைகளை உங்களுடைய மடியில் வைக்கவும்.
 3. நான்கு எண்ணும் வரை மூச்சை மெதுவாக உள்ளே இழுக்கவும்.
 4. நான்கு எண்ணும் வரை மூச்சை மெதுவாக வெளியே விடவும்.
 5. மேலே குறிப்பிட்ட மூன்றாவது மற்றும் நான்காவது பயிற்சிகளை மீண்டும் செய்யவும்.