Latest Statement from HealthServe

SG C19 HEADCOUNT UPDATE 2020-04-15

சகோதரர்களே,
நேற்றிரவு, சிங்கப்பூரில் புதிதாக 447 பேருக்கு கோவிட்-19 இருப்பது
உறுதிபடுத்தப்பட்டது. இதுவரை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை 3,699 – ஆக அதிகரித்துவிட்டது.
447 பேரில், 404 பேர் ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்பவர்கள்.
இதை நாம் இலேசாக எடுத்துகொள்ள கூடாது. ஆனாலும் இவ்விரண்டு
காரணங்களுக்காக நாம் பதற்றம் அடையகூடாது:
முதலாவதாக, ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் நம் சகோதரர்கள் சோதனை
செய்யப்படுகிறார்கள். இதனால் உருதிப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கையும் கூடுகிறது.

இரண்டாவதாக, உங்கள் வயதினருக்கு, கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஏற்படும்
நோய் பொதுவாக லேசானது. ஒரு பிரிட்டிஷ் ஆய்வில் “20 வயதிற்குட்பட்டவர்களில் 1.0%
பேர், 30-39 வயதிற்குட்பட்டவர்களில் 3.4% பேர் மற்றும் 40-49 வயதிற்குட்பட்டவர்களில்
4.3% பேர்” மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

எனவே பெரும்பாலான இளம் நோயாளிகளுக்கு மருத்துவமனைக்கு வெளியே சிகிச்சை
அளிக்க முடியும். இதுவும் சிங்கப்பூரின் நடைமுறைக்கு ஒத்திருக்கிறது: மருத்துவமனையில்
சிகிச்சைபெற்று வரும் 1,496 பேரில் 26 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர் ; எஞ்சிய
1,540 பேர் நலமாக இருந்தாலும், கிருமித்தொற்று பாதிப்பிலிருந்து இன்னும் விடுபடவில்லை.
எனவே தனிமைப்படுத்தும் இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆயினும்கூட, இது உங்களுக்கு ஒரு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நேரமாக இருக்கும்
என்பதை நாங்கள் அறிவோம்.

சிங்கப்பூர் அதிகாரிகள் உங்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கு உறுதி அளித்தும்
முடிந்தவரை உங்களுக்கு உதவுவர் என்றும் அறிவித்துள்ளனர்.
Dr Benjamin Kuan (தலைவர், மருத்துவ சேவை – ஹெல்த்செர்வ்)

Learn more about HealthServe’s latest news

Learn more about HealthServe’s latest news

Learn more about HealthServe’s latest news