மன நலன் பற்றிய அறிமுகம்

மன நலன் என்றால் என்ன?

மன நலன் உடல் நலத்தைப் போன்றது. உடல் நலனில், நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், உங்களுக்கு  நிறைய சக்தி  இருப்பதுடன்  சிறப்பாக வேலை செய்யவும் முடியும். ஆனால், உடல் நலமில்லை என்றாலோ, அதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறவில்லை என்றாலோ,, சர்க்கரை நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வரக்கூடும். 

மாறாக, மன நலன் என்பது  நம் மனம், நடத்தை, மற்றும் உணர்ச்சிகளைக் குறிக்கிறது. நம் வாழ்க்கையை சமாளிக்கும்போது, நாம் எவ்வாறு சிந்திக்கிறோம், உணர்கிறோம், நடந்துகொள்கிறோம்  என்பதைக் குறிக்கிறது. மனதளவில் ஆரோக்கியமாக இருப்பவர், அச்சம்,, கோபம், பொறாமை, குற்ற உணர்வு  அல்லது மனப்பதற்றம் போன்ற உணர்ச்சிகளால் அவதிப்படமாட்டார்.   வாழ்க்கையில் வரும் கஷ்டங்களைக் கையாளும் திறன் இவர்களுக்கு இருக்கும்.

 

உடல் நலனைப் போல, ஒருவர் மனப்பதற்றம் அல்லது அச்சம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளால் அவதிப்பட்டால், மனதளவில் அவர் பாதிப்படையலாம். ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறவில்லை என்றால், மனச்சோர்வு   அல்லது பொதுவான  மனப்பதற்றம் போன்றவை ஏற்படக்கூடும்.

 

நினைவிருக்கட்டும், சலி அல்லது இருமல் போல ஒருவருக்கு வருவதுபோல, மன அழுத்தத்தின்போது  அல்லது பதற்றமான காலத்தின்போது,  ஒருவர் மோசமான  மன நலனையும் அனுபவிக்கலாம்.

மன நலன் என்றால் என்ன?

ஒருவர் தன்னுடைய ஆற்றலை அறிந்து, வாழ்வின் வழக்கான மன அழுத்தங்களைச் சமாளித்து, வேலையை செவ்வனே பலனளிக்கும் வகையில்  செய்து முடித்து, சமூகத்திற்கு பங்களிப்பதுதான் மனநல நிலை என்பதாகும். 

மன அழுத்தம் என்றால் என்ன?

மன அழுத்தம் என்பது நமது அன்றாட வாழ்வில் வழக்கமான ஒன்றாகும்.. ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்கத் தவறினாலோ,  மாதக் கடைசி வரை பயம் இருக்காது என்ற நிலையில் இருக்கும்போதோ நமக்கு மன அழுத்தம் ஏற்படலாம்.

ஆனால், மன அழுத்தம் நல்லதாக அல்லது கெட்டதாக இருக்கலாம்.

நல்ல மன அழுத்தம்

  • ஆற்றல் வெளிப்பாட்டைத் தரும் ( எ.கா. குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை  முடிக்கத் தவறியிருந்தால்)
  • அன்றாடச் சவால்களை சமாளிக்கவும்  நம் இலக்குகளை அடையவும்  தூண்டுகோலாக இருக்கும்.
  • நம் பணிகளை செயல்திறன்மிக்க வகையில் செய்து முடிக்க உதவும்.

கெட்ட மன அழுத்தம்

ஒரே மன அழுத்தத்துடன் பல வாரங்களுக்கோ மாதங்களுக்கோ அவதிப்பட்டோமானால், அது நமக்குத் தீமை பயக்கும்: 

  • மன நலத்தப்  பாதிக்கும் (எ.கா. அதிகமான விழிப்புணர்வு அல்லது தூங்க முடியாமல் செய்யும் அதிகக் கவலை கொள்தல்))
  • நம் உடல் நலத்தைப் பாதிக்கும் (எ.கா. நம் எதிர்ப்புச் சக்தியை வலுவிழக்கச் செய்யும்)

எனக்கு அதிக மன அழுத்தம் இருக்கிறது என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது?

அதிக மன அழுத்தத்தினால் அவதிப்படத் தொடங்குவதை நம் உடல்  நமக்குக் காட்டும்.  பின் வரும் எச்சரிக்கை  அறிகுறிகளைக்  கவனியுங்கள்: 

உடல் ரீதியான அறிகுறிகள்:

தொடர்ந்து  தலைவலி வருதல
உடல் நோவு  மற்றும் வலி
அடிக்கடி நோய்வாய்ப் படுதல்

மன ரீதியான அறிகுறிகள்:

கவனம் செலுத்துவதில்  அல்லது பணிகளை முடிப்பதில் சிரமம் உங்களுக்குக் கவலை தரக்கூடியவற்றைப் பற்றி அடிக்கடி யோசிப்பது