உதவி பெறுவது எப்படி

இலவச ஆலோசனைக்கு கீழே உள்ள லிங்க் மூலம் பதிவு செய்யவும்.

நம் ஒற்றுமையின் சுவர்

சில நேரங்களில் மற்றவர்கள் எதிர் நோக்கும் சவால்களைப் பற்றிக் கேட்பதும், உற்சாகமளிக்கும்  வார்த்தைகளை கேட்பதும், படிப்பதும், மற்றொரு நாளைப் போராடிக் கடந்துசெல்ல உங்களுக்கப்  பலத்தையும்  தரும்.

அதனால்தான் நாங்கள்  ஒற்றுமைச் சுவரைத் தொடங்கியுள்ளோம். இந்த வேளையில் நீங்கள் இங்கு செய்திகளைப் படிக்கலாம் ஒருவருக்கொருவர் ஊக்கமளிக்கும் செய்திகளைப் பதிவேற்றம் செய்யலாம். 

அனைத்து இடுகைகளும் மதிப்பாய்வு செய்யப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட பின்னரே பதிவேற்றம் செய்யப்படும். 

தனிமையை தவிர்க்க, நான் யாரிடமாவது இன்னும் பேச வேண்டும் என்று எண்ணினால்.

இந்தச்  சிரமமான காலத்தில், சில சமயம் உங்களுக்கு நம் நிலைமையைப்  புரிந்து கொண்டு, நம் பிரச்சனைகளைக் கேட்டு அறிந்து, தக்க அறிவுரை கூறமாட்டார்களா எனத் தோன்றும். எங்கள் ஹெல்த் ஸர்வ் நிறுவனத்தில் உங்கள் குறைகளைக் கேட்டு அறிந்துகொள்ள ஆலோசகர்களும், மன நல மருத்துவர்களும் உள்ளனர்.

நீங்கள், இலவச ஆலோசனை அமர்வுகளுக்கு, +65 3157 4450 ஐ அழைத்து உங்கள் பெயர் மற்றும் பிரச்சனையை கூறி, பதிவு செய்து கொள்ளலாம். 

எங்கள் ஆலோசகர்கள், நீங்கள் அழைத்த தொலைபேசி எண்ணிற்கு மறுபடியம் அழைப்பார்கள்

மாற்றுவழியாக, நீங்கள் வாட்ஸாஅப்/சாட்பாட் (மின் உரையாடல்)  மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.