அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நாங்கள் அடிக்கடி வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து பெறும் கேள்விகளைப் போலவே  உங்கள் கேள்விகளும் இருக்கலாம் என்பதால் அவற்றிற்கான பதிலைத்தெரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.  

மேல் விவரங்களுக்கு ஹெல்த்சர்வ் ஹாட்லைன் எண் +65 3157 4450 -ஐ தொடர்புகொள்ளுங்கள்..நாங்கள் விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.

கொவிட்-19 பற்றிய கேள்விகள்:

கொவிட்-19 & ‘சர்கியூட் பிரேக்கர்’   (நோய்ப் பரவலை முறிப்பதற்கான நடவடிக்கைகள்):

உங்களுக்கு உண்ண உணவு உண்டா, சுகாதாரப் பழக்கவழக்கங்கள், பாதுகாப்பு தூர  இடைவெளியை மேம்படுத்துதல், உங்களுக்கு உடல்நலமில்லை என்றால் என்ன நடக்கும், எவ்வாறு உங்கள் குடும்பத்திற்கு பணம் அனுப்பலாம் என்ற அனைத்தையும் பார்த்துகொள்ள அரசாங்கம் அமைத்த குழுதான் இது.

கொவிட்-19 உறுதி செய்யப்பட்டாலும் தீவிர அறிகுறிகள் காட்டாத நோயாளிகளுக்கான ஓர் இடம். சோதனையில் நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டதும் இந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள், மருத்துவமனைக்கு அல்ல. சீசீஃபிற்கு பிறகு நீங்கள் சமுக குணமடையும் வசதிக்கு செல்வீர் (நோய் பரவலை தடுக்க).

மன நலன் பற்றிய கேள்விகள்

இந்தச் சமயம் அனைவருக்கும் மன அழுத்தம் தரக்கூடியதாகும். இந்த கடினமான சமயத்தில், மன அழுத்தமோ, குழப்பமோ, பயமோ, கோபமோ ஏற்படுவது இயல்பான உணர்ச்சிகளாகும்.

உங்கள் நண்பர்களுடனும் மற்றும் குடும்பத்தினருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். இந்த நேரத்தில் அரசாங்கம் இலவச அருகலையை (வைஃபை) வழங்கும். மேலும், சிங்டெல், எம் 1 மற்றும் ஸ்டார்ஹப் ஆகியவை இலவச தரவு அட்டைகளை தங்குமிடங்களுக்கு விநியோகிக்கும், எனவே நீங்கள் தொடர்ந்து தொடர்பில் இணைந்திருக்கலாம்.

பதில்: உண்மையாக என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள நம்பகமான செய்தியை நாடுங்கள். எங்கள்
வள மையம் (Resource center)
இல் இருக்கும் இணைப்புகளை, உண்மையான செய்திக்கு நாடவும்.

வேலை பற்றிய கேள்விகள்

அனைத்து ஸ்பெஷல் பாஸ் வைத்திருப்பவர்களின் தேதி முடிவடைந்த பின்னர் அவர்களின் பாஸ்கள் தானாகவே புதுப்பிக்கப்படும். ஸ்பெஷல் பாஸ் வைத்திருப்பவரின் செல்பேசிக்கு ஒரு SMS அனுப்பிவைக்கப்படும்.

ஹெல்த்ஸர்வ் உங்களுக்கு உதவ முடியும், எங்கள் கேஸ்வொர்க்கர் (தொண்டர்) உங்களுடன் தொடர்புகொண்டு உங்கள்விரச்சனையை MOMகுக் கொண்டு வருவார். தயவுசெய்து எங்கள் தொலைபேசி எண் (+65 3157 4450) அழைத்து தகவலை விட்டுச் செல்லுங்கள், நாங்கள் விரைவில் உங்களுடன் தொடர்புகொள்வோம்.

உங்களுக்கு இருமல், காய்ச்சல், சளி அல்லது வறண்ட இருமல் இருந்தால்:

  • தயவுசெய்து ஒரு முகக்கவசத்தை அணிந்து கொள்ளுங்கள்.
  • தயவுசெய்து உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை உங்கள் முதலாளிக்குத் தெரிவிக்கவும்.
  • நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்ப்பதற்கு உங்கள் முதலாளி ஏற்பாடு செய்வார்.

 

மற்ற நோய்களுக்கு, உதவிக்காக அலுவலக நேரங்களில் மனிதவள அமைச்சின் ஹாட்லைனை (6438 5122) என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.

பிர்சசனைகளைத் தீர்க்க உதவும் அதிகாரி , உங்களுடன் தொடர்பு கொள்வார்.

 
தயவுசெய்து அமைதியாக இருங்கள். உதவிக்காக அலுவலக நேரங்களில் நீங்கள் MOM தொலைபேசி எண் (6438 5122) அழைக்கலாம். உங்கள் நிலைமைக்கு உதவ ஒரு அதிகாரி உங்களுடன் தொடர்புகொள்வார்.

 ஹெல்த்ஸர்வ் உங்களுக்கு உதவ முடியும். தயவுசெய்து எங்கள் சாட்போட் / தொலைபேசி எண் மூலம் எங்களுக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள், ஒரு கேஸ்வொர்க்கர் அதிகாரி விரைவில் உங்களுடன் தொடர்புகொள்வார்.

 ஆம், உங்கள் தேவைகளைப் பொறுத்து ஹெல்த்ஸர்வ் உங்களுக்கு ஆதரவு வழங்க முடியும் . தயவுசெய்து எங்கள் ஹாட்லைன் / சாட்போட்டில் (+65 3157 4450) எங்களை அணுகவும், ஒரு செய்தியை அனுப்பவும், உங்களுக்கு உதவ எங்கள் கேஸ்வொர்க்கர் உங்களுடன் தொடர்புகொள்வார்.

தயவு செய்து உங்கள் முன்னேற்பாட்டு அட்டையை, உங்கள் முதலாளியிடமோ அல்லது விடுதி பாதுகாப்பு அதிகாரியிடமோ காட்டவும். அரசாங்க இதழில் வெளியிட்பபட்ட தனிமைப்படுத்தும் விடுதி ஒன்றில் நீங்கள் தங்கவில்லை என்றால், அவர்கள் உங்களை மருத்துவமனைக்குச் செல்ல அனுமதிப்பார்கள். வெளியே செல்ல அனுமதி கேட்க உதவி தேவைப்பட்டால், எங்களது ஹாட்லைன்/சாட்பாட்(+65 3157 4450) ஐ அழைத்து செய்தி அனுப்பவும். பிர்சனையைத் தீர்த்து வைக்கும் எங்கள் அதிகாரி உங்களுடன் தொடர்பு கொள்வார்.