எனக்கு உடல்நிலை சரியில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் அறிகுறிகளை மறைக்க வேண்டாம் அல்லது உடல்நிலை சரியில்லை என்றால் வேலைக்குச் செல்ல வேண்டாம்.

நான் தங்கும் விடுதியில் இருக்கிறேன். எங்கு செல்வது?

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கென கட்டப்பட்ட விடுதிகளில் நீங்கள் இருந்தால் ( உங்களுக்கு தெரியவில்லை என்றால் இங்கு சொடுக்கவும்), மருத்துவ சேவை வழங்கும் இடம் அங்கு இருக்கும்.

விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக  உள்ள பொழுதுபோக்கு மையங்களில் மருத்துவ சேவை வழங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. (*) (#)

12 நடமாடும் மருத்துவ குழுக்கள் அதிகம் சம்பவங்கள் உள்ள தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளுக்கு வருகை புரிவார்கள்.

விரைவில்:  விடுதிகளாக மாற்றப்பட்ட தொழிற்சாலைகளில் இருப்போர் மருத்துவரைச் சென்று பார்க்க, இலவச போக்குவரத்து சேவை வழங்கப்படும். உங்கள் தங்குவிடுதியை நடத்துபவர்களிடம் போக்குவரத்து சேவை வழங்கும் அனைவரின் பெயர் பட்டியல் இருக்கும். இதை மனிதவள அமைச்சு அவர்களுக்கு வழங்கியுள்ளது. அனைத்து ஓட்டுநர்களும் பாதுகாப்பு கவசங்களை அணிந்திருப்பர்.

சில ஊழியர் தங்கும் விடுதிகளில் பின்கூறப்பட்ட்டைவை  இருக்கலாம்:

1.மூச்சையும் இதய துடிப்பையும் சரிபார்க்கும் துடிப்பு ஒஃசிமீட்டர்

2.கைத்தொலைபேசியிலிருந்து மருத்துவருக்கு காணொளி வழி தொடர்புகொள்ளுதல். (மருத்துவ நிலையம் மூடியிருந்தால்)

*Kranji & Tuas தென் பொழுதுபோக்கு மையம் தொடங்கிற்று. பரிசோதனை முடிவுகள் சாதகமாக இல்லையென்றால் வேறு இடத்திற்கு சிகிச்சை பெற தயாராகவும்.

#விரைவில் உட்லண்ஸ் மற்றும் காக்கி புகிட் பொழுதுபோக்கு நிலையங்களில்

இப்பொழுது மருத்துவரை பார்க்க வேண்டும். எப்படி?

நான் தங்கும் விடுதியில் இல்லை. என்ன செய்வது?

உடல் நலம் மோசமாக இருந்தால், தங்கள் நிறுவன மருத்துவரையோ அல்லது பொது மருத்துவரையோ பாருங்கள். அல்லது ஹெல்த்செர்வ் கிளினிக்கை நாடலாம்.

நீங்கள் ஒரு மருத்துவரைப் பார்க்கவேண்டும் என்றால், தயவுசெய்து உங்கள் மேற்பார்வையாளருக்குத் தெரிவிக்கவும், நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது பொதுப் போக்குவரத்தை தவிர்க்கவும்.

எனக்கு ஸ்வாப் சோதனை தேவை​

உங்களுக்கு COVID இருப்பதாக சந்தேகித்தால் மருத்துவர் உங்களுக்காக ஒரு ஸ்வாப் சோதனை செய்யலாம்

பதற வேண்டாம்! நிதானமாக இருங்கள்.

மேலும் தகவல்களை இங்கே பெறலாம்:

எனக்கு மருத்துவ சான்றிதழ் (MC) வழங்கப்பட்டது

உங்களுக்கு COVID-19 இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று மருத்துவர் கருதினால், உங்களுக்கு மருத்துவ சான்றிதழ் (MC) வழங்கப்படலாம்.

MC காலம் முடியும் வரை, நீங்கள் வீட்டிலேயே தங்க வேண்டும். தயவுசெய்து வேலைக்குச் செல்ல வேண்டாம். சிங்கப்பூர் அரசாங்கம் மிகவும் கண்டிப்பானது மற்றும் MC வழங்கப்படும் போது வெளியே செல்லும் மக்களை தண்டிக்கும்.

முகமூடியை அணிந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களை நேரடியாக தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும். 

உங்களை எவ்வாறு பாதுகாப்பாக தனிமைப்படுத்த முடியும் என்று உங்கள் முதலாளியிடம் கேளுங்கள்.

புதிய அறிகுறிகள் தென்பட்டால் அல்லது மோசமடைந்தால், தயவுசெய்து மருத்துவரை பாருங்கள்.

நான் நன்றாக இருக்கிறேன், ஆனால் நான் ஒரு உடல்நிலை சரியில்லாத நபருடன் தொடர்பு கொண்டிருந்திருக்கலாம்.

பதற வேண்டாம்! நிதானமாக இருங்கள்.

உங்கள் அறிகுறிகளைக் கண்காணித்துகொள்ளுகள், உங்கள் வெப்பநிலையை தினமும் இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதேனும் புதிய அறிகுறிகள் தென்பட்டால் தெரிந்தால் மருத்துவரை பாருங்கள்.

உங்கள் அறிகுறிகளை அதிகாரபூர்வ ‘COVID-19 Symptom Checker’- எனும் இனையதளத்தில் பரிசோதித்து கொள்ளலாம்.

Contact tracing – மூலம் COVID-19 இருக்கும் நபருடன் தொடர்பு இருங்தது உறுதிப்படுத்தப்பட்டால், அரசாங்கம் உங்களை தொடர்பு கொள்ளலாம்.தயவுசெய்து அவர்களின் விசாரணைகளுக்கு உதவுங்கள் மற்றும் அவர்களின் ஆலோசனையைக் கேளுங்கள்.

அரசு ஊழியர்கள், உங்களுடைய பண விவரங்களையோ, வங்கி விவரங்களையோ கேட்க மாட்டார்கள்.