சிங்கப்பூரில் COVID நோயாளிகளுக்கு என்ன சிகிச்சை?

அதிகமானோர் பாதிப்பட்டிருக்கும் தங்கும் விடுதிகளில், தளத்திலேயே சமூக பராமரிப்பு வசதிகள் (சீசீஃப்) உருவாக்கப்படும்.

சீசீஃப் என்றால் என்ன? கொவிட்-19 உறுதி செய்யப்பட்டாலும் தீவிர அறிகுறிகள் காட்டாத நோயாளிகளுக்கான ஓர் இடம். சோதனையில் நோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டதும் இந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள், மருத்துவமனைக்கு அல்ல. சீசீஃபிற்கு பிறகு நீங்கள் சமுக குணமடையும் வசதிக்கு செல்வீர் (நோய் பரவலை தடுக்க).

பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகள் இருக்கும், எந்த குறிப்பிட்ட சிகிச்சையும் தேவைப்படாது.

சிங்கப்பூரில் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படுவதைத் தடுக்க, குணமடையக் காத்திருக்கும் போது அவர்கள் ஒரு அரசு மருத்துவமனையில் அல்லது தனிமைப்படுத்தும் வசதியில் அனுமதிக்கப்பட வேண்டும்
அவர்களின் உடல் நிலை கண்காணிக்கப்படும். நோய் தீவிரம் அடைந்தால், உடனடியாக சிகிச்சை வழங்கப்படும்.

அவர்களின் உடல் நலம் தேறினால், 2-3 வாரங்கள் கழித்து 2 ஸ்வாப் (swab) பரிசோதனைகள் செய்யப்படும். COVID-19 இல்லை என்று உறுதிபடுத்தப்பட்டால், அவர்கள் வீடு திரும்பலாம்.

நீங்கள் குணமடைந்து ஆரோக்கியமாக வேலைக்கு திரும்பவே அரசாங்கம் இவை அனைத்தையும் உங்களுக்காக செய்கிறது.

COVID-19 சோதனை அல்லது சிகிச்சைக்கு நான் கட்டணம் செலுத்த வேண்டுமா?

நீங்கள் பதிவுசெய்த மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டால், கோவிட் -19 சோதனை சிங்கப்பூரில் உள்ள அனைவருக்கும் இலவசம்.
நீங்கள் மார்ச் 27, 2020 முன் சிங்கப்பூரில் இருந்திருந்தால், அனைத்து நீண்ட கால பாஸ் அனுமதி (எஸ்-பாஸ், பணி அனுமதி) வைத்திருப்பவர்களுக்கும் COVID -19 சிகிச்சை பெற மருத்துவமனையில் தங்குவது இலவசம்.

தனிமை மண்டலம்

கிருமி பரவலைத் தவிர்க்க சிங்கப்பூரர்களும் வெளிநாட்டு ஊழியர்களும் வீட்டிலேயே இருக்கவேண்டும்.

நீங்கள் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், அங்குக் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம். நீங்கள் விடுதியிலுள்ள உங்கள் அறையிலேயே இருந்து உங்களைப் பாதுக்காத்துக்கொள்ளவேண்டும்.

அரசாங்கம் உங்களுக்கு உணவு அளித்து உங்கள் சம்பளமும் கிடைக்கும்படி செய்யும்.

அரசாங்கம் நீங்கள் எப்போது வெளியே வர பாதுக்காப்பான தருணம் என்று தெரிவிக்கும்.

5 நாள் மருத்துவ சான்றிதழ்

நீங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் ஆனால் உங்களுக்கு COVID-19 இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று மருத்துவர் கருதினால், உங்களுக்கு மருத்துவ சான்றிதழ் (MC) வழங்கப்படலாம்,
MC காலம் முடியும் வரை, நீங்கள் வீட்டிலேயே தங்க வேண்டும். தயவுசெய்து வேலைக்குச் செல்ல வேண்டாம். சிங்கப்பூர் அரசாங்கம் மிகவும் கண்டிப்பானது மற்றும் MC வழங்கப்படும் போது வெளியே செல்லும் மக்களை தண்டிக்கும்.
முகமூடியை அணிந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களை நேரடியாக தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.
உங்களை எவ்வாறு பாதுகாப்பாக தனிமைப்படுத்த முடியும் என்று உங்கள் முதலாளியிடம் கேளுங்கள்.

புதிய அறிகுறிகள் தென்பட்டால் அல்லது மோசமடைந்தால், தயவுசெய்து மருத்துவரை பாருங்கள்.

சிகிச்சைக்குப் பிறகு, என்ன நடக்கும்?

குணமடைந்த ஊழியர்கள், சொந்த வசிப்பிடங்களுக்கு மற்ற நோய் இல்லாத ஊழியர்களுடன் வாழ அனுப்பப்படூவீர்கள். தங்கும்விடுதிகளில் இருக்கும் அடுக்குமாடி கட்டடங்கள், சுத்தமும் சுத்தீகரிப்பூம் செய்யப்படும். பாதுக்காப்பான இடைவேளை செயல்படுத்தப்படும். ஊழியர்கள் மற்ற கட்டடங்களுக்கு செல்ல முடியாது.

சில தங்கும் விடுதி மேலாளர்கள் சில ஊழியர்களை வேறு கட்டடங்களுக்கு அனுப்பவேண்டியதாக இருக்கும். தயவுசெய்து உங்கள் தங்கும் விடுதி மேலாளர்களின் வழிகாட்டுதலை பின்பற்றி அவர்கள் உங்களுக்கு உதவ வழிவிடுங்கள்.

அதிகமாக பாதிக்கப்படாத ஊழியர் தங்கும் விடுதிகளில் அதிக சோதனைகளும் தனிமைப்படுத்தல்களும் இருக்கும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைவரும் பாதுகாப்பாக மறுபடியும் வேலைகளை ஆரம்பிக்க உதவும்.

சிறிது காலத்திற்கு நீங்கள் வேறு ஒரு தங்குமிடத்திற்கு அனுப்பப்படலாம், உதாரணத்திற்கு தற்காலிக தங்குமிடங்கள், சுற்றுலா கப்பல்கள், விளையாட்டு கூடங்கள், அல்லது கட்டப்படும் புதிய ஊழியர் தங்கும் விடுதிகளுக்கு அனுப்பப்படலாம்.