ஹெல்த்செர்வ்-இன் அண்மைய தகவல்கள்

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடி திட்ட நடவடிக்கைகளை தளர்த்துவது முடிவடைந்த பின் என்ன நடக்கும்? (1 ஜூன்)

நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடி திட்ட நடவடிக்கைகளை தளர்த்துவது 1 ஜூனில் முடிவடைந்த பின் உங்கள் முதலாளியும் அரசாங்கமும் மேல் விவரங்கள் அளிக்கும் வரை உங்கள் வசிப்பிடங்களிளேயே இருக்க வேண்டும். உங்களுக்கு கோவிட்-19 இல்லை என்று உறுதி செய்யப்பட்டாலோ மருத்துவர் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிரீரகள் என்று உறுதி செய்தாலோ உடல் நலமான ஊழியர்கள் (BRW) என்ற இடத்திற்கு அல்லது வேறு தங்குமிடங்களுக்கு  மாற்றப்படுவீர்கள்.

 

நீங்கள் BRW-இல் இருந்தாலோ அல்லது உங்கள் முதலாளி நீங்கள் மறுபடியும் வேலை செய்யலாம் என்று தெரிவித்திருந்தாலோ நீங்கள் உங்கள் தங்குமிடத்தை விட்டு, வேலைக்காக மட்டும் வெளியே செல்ல்லாம். வேலை முடிந்தவுடன் BRW-க்கு திரும்ப வேண்டும். உங்கள் முதலாளி நீங்கள் வேலை இடத்திற்கு  செல்ல உங்களுக்கு தனியார் வாகனம் (எ.கா. வேன், லாரி, பேருந்து) தயார் செய்ய வேண்டும்.

 

முதல் கட்டம்: பாதுகாப்பான திறப்பு

ஊழியர்கள், நிறுவன வாகனங்களில் வேலைக்கு செல்ல மட்டுமே தங்குமிடங்களை விட்டு வெளியேற முடியும். மற்ற நாட்களில் தங்குமிடங்களிலேயே இருக்க வேண்டும்.

முதலாளிகள், ஊழியர்களுக்கு உணவும் அன்றாட தேவைகளும் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இரண்டாம் கட்டம்: பாதுகாப்பான மாற்றம்

சில ஊழியர்கள் ஓய்வு நாட்களில் தங்குமிடத்திற்கு வெளியே முக்கிய தேவைகளுக்காக வெளியே செல்ல்லாம், ஆனால் எல்லோரும் ஒன்றாக செல்லக்கூடாது.

நீங்கள் 2 மணி நேரம் வரைக்கும் தங்குமிடத்தை விட்டு தங்குமிடத்தின் வாகனத்தில் பொழுதுபோக்கு மையத்திற்கு செல்ல்லாம்.

மூன்றாம் கட்டம்: பாதுகாப்பான தேசம்

வெவ்வேறு ஓய்வு நாட்கள் கொடுப்பது தொடரும், ஆனால் ஓய்வு நாட்களில், ஊழியர்கள் தங்குமிடத்தை விட்டு அதிக நேரம் வெளியே இருக்கலாம். நிறைய இடங்களுக்கு செல்ல்லாம். 

சோதனை செய்யப்படாமல் தங்குமிடத்தில் இருப்போர் உணவும் மருத்துவ உதவியும் மனிதவள அமைச்சின் டெலிஹெல்த் சேவை வழியாகவும் தங்குமிடங்களில் இருக்கும் மருத்துவ நிலையங்கள் வழியாகவும் பெறலாம். 

மனிதவள அமைச்சின் செய்தி அறிக்கைகளின் சுருக்கம் (மே 2020)

ஜூன் 1, நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் முடிந்த பின்னர், ஊழியர்களின் நிலை என்ன?

தங்கும் விடுதிகளில்

 • அமைப்புகளுக்கு இடையிலான பணிக்குழு, மேலும் அதிகமான ஊழியர்களைப் பரிசோதனை செய்யவிருக்கிறது. நீங்கள் கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்து, வேலைக்கு மீண்டும் செல்வதை உறுதிசெய்வதாக அரசாங்கம் கூறியுள்ளது.
 • கடந்த முறை, மே 10-ஆம் தேதி, தங்கும் விடுதிகளில் உள்ள ஊழியர்களைக் கவனித்துக்கொள்ள மூன்று வெவ்வேறு கட்டங்கள் இருப்பதாக, பணிக்குழு அறிவித்தது
  • முதல் கட்டம்: பாதுகாப்பான தூர இடைவெளி
   • கூட்ட நெரிசலைக் குறைக்க, அத்தியாவசிய ஊழியர்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவார்கள்.   அவர்கள் மீண்டும் வேலையைத் தொடங்க உதவும் வகையில், விரைவில், பரிசோதிக்கப்படுவார்கள்.
  • இரண்டாம் கட்டம்: மருத்துவ ஆதரவு 
   • தங்கும் விடுதிகளிலேயே மருத்துவச் சாவடிகள், நடமாடும் மருத்துவ குழுக்கள் 
   • காணொளி வழி மருத்துவர்களுடன் கலந்துரையாடுதல்
   • அவசர ஆம்புலன்ஸ் சேவையும் உண்டு 
  • மூன்றாம் கட்டம் : குணமடையும் கட்டம் 
   • குணமடைந்த ஊழியர்கள், மெதுவாக மீண்டும் வேலைக்குத்  திரும்பலாம்
   • ஊழியர்களின் உடல்நிலையைக் கண்காணிக்க புதிய வழிகள்

பாதுகாப்பாக வேலை செய்தல்

 • ஒவ்வொரு துறையும், கொவிட் கிருமித்தொற்றுக்கு எதிரான் பாதுகாப்பைக் கொண்டிருக்கும் வகையில் குறிப்பிட்ட செயல்திட்டங்களைக் கொண்டிருக்கும்
 • கட்டுமானத் துறையைப் பொறுத்தமட்டில் கட்டடக் கட்டுமான ஆணையம், கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கான தகுதிவரம்புகளைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பாக வாழ்தல்

 • தங்கும் விடுதிகளில் இருக்கும் சில கட்டடங்கள், குணமடைந்த ஊழியர்களுக்காக ஒதுக்கப்படும் என்று பணிக்குழு தெரிவித்தது.   கொவிட் கிருமித்தொற்று தொடர்ந்து இல்லாத, தங்கும் விடுதிக்கு மீண்டும் செல்லக்கூடிய ஊழியர்களுக்காக இந்தக் கட்டடங்கள் உள்ளன.

நுழைவுக்கும் வெளியியேறுவதற்கும் இறுக்கமான கட்டுப்பாடுகள் 

 • BRW* – என்ற கட்டடங்களில் இருப்பது  மற்ற கட்டடங்களைவிட வெறுப்படும். BRW-விடமிருந்து நுழையுதல் மற்றும் வெளியியேறுதல் கட்டுப்படுத்தப்படும்
 • BRW-வில் தங்கும் ஊழியர்கள்  வேலைக்கு மட்டும் தான் வெளியே போகலாம்,  வேலை முடிந்து அவர்கள் தங்குமிடத்திற்கு உடனே திரும்ப வேண்டும் 
 • சூழ்நிலை மேம்படும்போது, அரசாங்கம் ஊழியர்களை வேலை தவிர மற்ற காரணங்கள் முன்னிட்டு வெளியே செல்ல அனுமதிக்கும் வாய்ப்புள்ளது. ஆனாலும் அனைவரும் இன்னும் பாதுகாப்புதூர இடைவெளி சட்டத்தை  மற்ற சிங்கப்பூர் குடிமக்களை போல் பின்பற்ற வேண்டும் .  வெளியே சென்று குழுக்களாக சந்திக்கக்கூடாது. சில பிரபலமான பகுதிகளில் குறைந்ந்த மக்கள் தான் செல்லலாம். இதை எல்லாம் அரசாங்கம் விரைவில் அறிவிக்கும்.

*BRW= தங்கும்விடுதிகளில் இருக்கும் அடுக்குமாடி கட்டடங்கள் குணமடைந்த ஊழியர்களுக்குத் தனியாக ஒதுக்கப்படும்

ஊழியர்கள் இடையே ஒருங்கிணைந்து பழகுவதை கட்டுப்படுத்துதல் 

 • கிருமிகள் பரவுதலைத் தடுக்க ஊழியர்கள் மற்ற ஊழியர்களோடு பழகாமல் இருப்பதை தங்குவிடுதிகளை நடத்துபவர்கள் கவனிக்க வேண்டும்
 • தங்குவிடுதியை நடத்துபவர்கள் பொது இடங்களுக்கும் நுழைப்பாதைகளுக்கும் தடுப்புகளையும் குறிப்பிட்ட பாதைகளையும் அமைக்க வேண்டும். ஒவ்வொறு கட்டடத்திலும், ஊழியர்கள் அதே மாடியிலும் அறையிலும் இருக்க வேண்டும். வேறு மாடிக்கு போகக்கூடாது. பொது கழிவறைக்குள் , சில குளியறை மட்டும், கை கழுவும் தொட்டிகள் மற்றும் கழிவறைகளில் ஒரே அறையிலிற்கும் ஊழியர்கள் பயன்படுத்த  குறிப்பான்கள் வரையப்படும். சமைக்க தொடங்க விடும்போது, பொது சமையலறையில் தங்கும் அறையைப் பொறுத்து தான் குறிப்பிட்ட சில அடுப்புகளை மட்டும் தான் ஊழியர்கள் பயன்படுத்தலாம்.
 • தங்கும்விடுதிகளிடமிருந்து வேலைக்கு போகும்போதும் திரும்பிவரும்போதும், காத்திருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்படும். தங்கும்விடுதிகளிடமிருந்து வேலைக்கு போகும்போதும் திரும்பிவரும்போதும், காத்திருப்பதற்கு ஒரு குறிப்பிட்ட இடம் ஒதுக்கப்படும். ஏற்றும் மற்றும் இறக்கும் நேரங்கள் ஒண்றுவிட்டு ஒன்றாக அமைக்கப்படும் .
 • தங்குவிடுதியில் உள்ள மினி-மார்ட் என்ற் பொருள் கடைகள், உணவகங்கள் மற்றும் கடைகளில் தொடர்ப்பு இல்லாமல் பொருட்களை வாங்கும் முறை அமைக்கப்படும். ஊழியர்கள் கைத்தொலைப்பசியின் மூலம் கூப்பிட்டோ மெசேஜ் அனுப்பியோ அல்லது இணையம் வழி பொருட்களை வாங்கி அனுப்பும் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.குறிப்பிட்ட நேரங்களில் தான் ஊழியர்களால் சமையல் அறை மற்றும் வெளியே இருக்கும் பொழுதுபோக்கு இடங்கள் போன்ற பொது இடங்களைப்  பயன்படுத்த முடியும்.

விழிப்புடன் இருப்பது

 • குடியிருப்பாளர்கள் தொடர்ந்து  சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். தினமும் அவர்களது வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத்துடிப்பின் வேகம் ஆகியவற்றை தெரியப்படுத்த வேண்டும்.   உடல் நலம் குன்றினால், உங்களுடைய குடியிருப்புக்கு உள்ளே அல்லது அருகிலுள்ள மருத்துவ முகாமில் இருந்தோ  அரசாங்கம் உங்களுக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்கும். இந்த மருத்துவ   சேவை  COVID  மட்டும் அல்லாது  அனைத்து நோய்களுக்கும் பொருந்தும்.
 • ஒருவருக்கு COVID  தொற்று ஏற்பட்டால், அவர் தொடர்புடைய  மற்றவர்களும்  அதே இடத்திலோ அல்லது சமூக தனிமைப்படுத்தல் முகாமிலோ தனிமைப்படுத்தப் படுவார்கள்.  அனைத்து ஊழியர்களும் இந்த சோதனைக்கு உட்படுத்தப் படுவார்கள்.  அதன்மூலம் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கப்படும்

தொடர்புகளின் தடங்களை அறிதல்

 • வருகிற 1st June முதல், தங்குமிடத்தில் உள்ள அனைவரும் TraceTogether  செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
 • பதிவிறக்கம்  செய்வதால், நோய் தொற்று ஏற்படும் போது அரசாங்கத்திற்கு தொடர்பு அறிதல் செய்ய உதவி தரும்.
 • நீங்கள் இந்த செயலியை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்  (Android & iOS): https://www.tracetogether.gov.sg

தங்கும் விடுதிக்கு வெளியே

SHN

 • கட்டுமானத்துறையில் வேலை செய்யும் work permit and S-Pass  தொழிலாளர்களுக்கு SHN, 18 ஆம்  தேதி மே மாதம் முடிவடைந்தது.   ஆனால் தற்போதைய circuit breaker நடவடிக்கைகள் தொடர்ந்து அமலில்  இருக்கும்.  ஆதலால் அனைவரும் வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும்.  அத்தியாவசிய தேவைகளுக்கும், மருத்துவ உதவிகளுக்கும்  மட்டுமே வெளியே செல்லவும்.
 • நீங்கள் circuit breaker  நிபந்தனைகளை பின்பற்றவில்லை என்றால்,  உங்களது Work Permit, S-Pass or Dependent Pass ரத்து செய்யப்படும்

போக்குவரத்து

 • பொது போக்குவரத்து வண்டிகளில், அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.   அருகில் இருப்பவர்களிடமோ,   தொலைபேசியிலோ  பேசக்கூடாது. சுகாதாரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

தொடர்பு தடம் அறிதல்

 • வருகிற 1st June முதல்,  Work Permit & S-Pass  வைத்திருக்கும்   கட்டுமானத்துறை, கடல் துறை, செயல்முறை துறை தொழிலாளர்கள், TraceTogether  செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
 •  பதிவிறக்கம்  செய்வதால், நோய் தொற்று ஏற்படும் போது அரசாங்கத்திற்கு தொடர்பு அறிதல் செய்ய உதவி தரும்.
 • நீங்கள் இந்த செயலியை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்  (Android & iOS): https://www.tracetogether.gov.sg

நான் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்

 • மனிதவள அமைச்சு “FWMOMCare” என்ற ஒரு புதிய கைபேசி செயலியை  உருவாக்கியுள்ளது.
 • அனைத்து ஊழியர்களையும் (வேலை அனுமதி அட்டை உடையவர்கள் மற்றும் S-pass ஊழியர்கள்) புதிய செயலியை பதிவிறக்கம் செய்யவும், அதில் பதிவு செய்யவும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
 • இந்த செயலியை பயன்படுத்தி:
  • நாள் ஒன்றுக்கு இரண்டு முறை உடல் வெப்பநிலையை பதிவு செய்யலாம்.
  • இருமல், தொண்டை வலி, மூக்கிலிருந்து நீர் வடிதல்/ மூக்கடைப்பு அல்லது மூச்சுத்திணறல் இருந்தால் செயலியில் எழுத வேண்டும்.
 • மருத்துவர் முப்பது நிமிடங்களுக்குள் உங்களை கைத்தொலைபேசியிலிருந்து காணொளி வழியாகத் தொடர்புக் கொள்வார்.
 • நீங்கள் இந்த செயலியை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்: Android (www.mom.gov.sg/fwmomcare-android), iOS (www.mom.gov.sg/fwmomcare-ios)

முதலாளி என்னை வேலைக்குச் செல்லச் சொல்கிறார். என்ன செய்கிறது?

BCA-வின் ஆக அண்மைய தகவல்களின் சுருக்கம்

 • கொவிட்-19 கிருமி மீண்டும் பரவாமல் இருக்க கட்டுமான பணிகளை மெதுவான கட்டங்களாக மீண்டும் தொடங்கலாம். (உதாரணமாக, எம்ஆர்டி / ஆழமான கழிவுநீர் சுரங்கப்பாதை அமைப்பு, ஆழமான அகழ்வாராய்ச்சி பணிகள், பால கட்டுமானம் மற்றும் பிரீகாஸ்ட் உற்பத்தி ஆலையை வேலைகள்)
 • அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பணி தளங்களிலும் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
  • கொவிட்- பாதுகாப்பான வேலை அமைப்பு
   • அனைத்து ஊழியர்களும் Trace Together செயலியை 1 ஜூன் அல்லது நிறுவனங்கள் வேலையைத் தொடங்க விண்ணப்பிக்கும்போது, எது முதலில் வருகிறதோ, அப்போது பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
   • முதலாளிகள் உங்கள் உடல் நிலையை தினமும் சரிபார்க வேண்டும் மற்றும் வேலை இல்லாத நாட்களில் சமூக தொடர்புகளை நிர்வகிக்க வேண்டும்.
   • நீங்கள் வழக்கமாக ஸ்வாப் மூலம் பரிசோதிக்கப்படுவீர்கள் (தளத்தில் வேலை செய்தாலும் செய்யவில்லை என்றாலும்)
    • வேலையைத் தொடங்கவில்லை என்றால் ஸ்வாப் பரிசோதனை மூலம் கோவிட்-19 இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வேலைக்கு செல்லலாம்.
    • வேலை செய்யத் தொடங்கிவிட்டால்,  இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஸ்வாப் பரிசோதனை செய்ய வேண்டும்.
    • Circuit Breaker பொது வேலை செய்யத் தொடங்கிவிட்டால், தொடர்ந்து வேலை செய்யலாம் ஆனால் 15 ஜூனிற்க்குள் ஸ்வாப் பரிசோதனை செய்ய வேண்டும்.
  • கொவிட்- பாதுகாப்பான பணிநிலையங்கள்
   • SafeEntry, அடையாள அட்டையை பயன்படுத்தும் செயலியை பயன்படுத்தி நுழைவதையும் வெளியேறுவதையும் பதிவு செய்ய வேண்டும்.
   • கொவிட்-19 கிருமி பரவுவதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். (உதாரணமாக, அணிகளாக பிரித்து வெவ்வேறு இடங்களில் வேலைப் பார்பது, இடைவெளி நேரத்தை பிரிப்பது)
  •  
  •  கொவிட்- பாதுகாப்பான ஊழியர்(தங்குமிடம் மற்றும் போக்குவரத்து)
   • தங்குமிடங்களில், ஊழியர்களை அவர்கள் செய்யும் திட்டங்களை வைத்து பிரிக்கபடுவர்
   • வேலை இடங்களிருந்து தங்கும் விடுதிகளுக்கு போக்குவரத்து வழங்கப்படும். (வேலை தளத்தில் தங்கவில்லை என்றால்)

   முகமூடி அணிய நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் மற்றவர்களுடன் பேசக்கூடாது.

  • அனைத்து ஊழியர்களும் “COVID-Safe Training for Workers” என்ற பயிற்சியைச் செய்ய வேண்டும்

மனிதவளஅமைச்சின்/BCAவின் முழுமையான அண்மைய தகவலை படிக்க:

 1. Advisory on Safe Management Measures for workers on employer-provided transportation [29 May 2020]
 2. ADVISORY FOR A SAFE AND CONTROLLED RESTART OF THE CONSTRUCTION SECTOR FROM 2 JUNE 2020 [25 May 2020]
 3. New Resources to Provide Better Care for Migrant Workers [27 May 2020]
 4. Notification to employers on requirements for construction foreign employees after the Stay-Home Notice (SHN) period [15 May 2020]
 5. Safe Working and Safe Living [15 May 2020]
 6. Leveraging Medical Technologies to Monitor Health of Foreign Workers More Effectively [10 May 2020]

 

ஹெல்த்செர்விலிருந்து கொவிட்-19 பற்றிய அண்மைய தகவல்

அன்புள்ள வெளிநாட்டு நண்பர்களே, பதற்றம் அடையாதீர்கள் ! 728 என்ற எண்ணிக்கை பீதியையும் பயத்தையும் ஏற்படுத்தலாம்.  குறிப்பாக இதில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் 654 பேர்களும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதியிலிருந்துதான்.   ஆனால் இது எதிர்பார்க்கக்கூடிய

Read More »

சிங்கப்பூரின் அண்மைய தகவல்கள்

பிரதமர் லீ சியன் லூங்: நமது வெளிநாட்டு ஊழியர்களை கவனித்துக் கொள்வோம்

மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ-வின் அறிவிப்பு

ஆக அண்மைய நிலவரம்

சிங்கப்பூரில் கொரோனா கிருமியால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை
(3 டிச., 2021)

0
புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர்
0
இதுவரை கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர்
0
இதுவரை மருத்துவமனையிலிருந்து வெளியேறியோர்
0
உயிரிழந்தோர்