கொவிட்-19 கிருமியிலிருந்து என்னையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதுகாப்பது?

கிருமி பரவலைத் தடுக்க பின்வரும் குறிப்புகளைப் படித்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கைகளைக் கழுவவும்!

கைகளைச் சவர்க்காரமும் தண்ணீரையும் கொண்டு கழுவவும். இது எளிதான மிக பயனுள்ள முறையாகும்!

உங்கள் இருமலைக் கவனிக்கவும்!

இருமும்போது அல்லது தும்மும்போது, உங்கள் வாயையும் மூக்கையும் திசு காகிதம் அல்லது மடித்த முழங்கை கொண்டு மறைக்கவும். உடனடியாக திசுவை தூக்கி எறிந்து கைகளை கழுவவும்

சமூக இடைவெளியை பின்பற்றுங்கள்

சமூக இடைவெளி என்பது உங்களையும் மற்றவர்களையும் தற்காத்துக்கொள்வதற்கு. மற்றவர்களிடமிரந்து பாதுகாப்பான இடைவெளி விட்டு விலகி இருப்பது.

நீங்கள் தற்போது, சிஙப்பூர் அரசின் விதிமுறைப் படி ஏப்ரில் 7 முதல் மே 4 வரை வேலைக்குச் செல்லவில்லை என்றால், வீட்டை விட்டு தயவுசெய்து வெளியே செல்லாதீற்கள்.

மருத்துவரைப் பார்க்கவோ அல்லது உணவு வாங்கவோ (முதலாளியிடமிருந்து அல்லது விடுதியிலிருந்து கிடைக்கவில்லை என்றால்) மட்டுமே நீங்கள் வெளியே செல்லலாம்.

உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால், ஹெல்த்சர்வ் ஹாட்லைன்-கு தொடர்புகொள்ளுங்கள்:

 +65 3157 4450

கண்டிப்பாக வெளியே செல்ல வேண்டும் என்றால், யாருடனும் அருகில் செல்ல வேண்டாம். மற்றவரிடமிருந்து 1-மீட்டர் தொலைவில் நிற்க்கவும். குறிக்கப்பட்டுள்ள இடத்தில் நிற்க வேண்டாம்.

முகமூடி அணியுங்கள்

ஊழியர் தங்கும் விடுதிக்குள், ஊழியர் தங்கும் விடுதிக்கு வெளியே.

நீங்கள் நன்றாக இருந்தாலும் பொது இடங்களுக்கு வெளியே செல்லும்போது முகமூடி அணியுமாறு சிங்கப்பூர் அரசு பரிந்துரைக்கிறது

உங்களுக்கு உடல் நலம் என்றாலும் கூட, பொது இடங்களுக்குச் செல்லும்போது முக பாதுகாப்புக் கவசம் அணியுமாறு சிங்கப்பூர் அரசு பரிந்துரைக்கிறது

சுற்றுச்சூழலை சுத்தம் செய்யுங்கள்!

சுற்றுச்சூழலை முடிந்தவரை சுத்தமாக வைத்திருங்கள்.

அடிக்கடி தொட்டுப் பிடிக்கும் பொருட்களை ,  ஆல்கஹால் கொண்டிருக்கும் துடைப்பான்களால் (alcohol-based disinfectants) துடையுங்கள். அல்லது ப்ளீச் கரைசலை தண்ணீருடன் கலந்து(diluted bleach solution) பயன்படுத்துங்கள்.

வேறு எப்படி நான் உதவ முடியும்?

TraceTogether செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்:

https://www.tracetogether.gov.sg/

சமூகத்தால் இயக்கப்படும் தொடர்புத் தடத்தில் உங்கள் பங்கை ஆற்றலாம்.