இணையத்தில் கேள்விப்பட்டேன்! இது உண்மையா?

தவறான தகவல்களைப் பற்றி கவனமாக இருங்கள்! இது உண்மையா என்று சோதிக்காமல் தகவல்களைப் பகிரவேண்டாம்.


சில போலி செய்திகள் இங்கே விளக்கப்பட்டுள்ளன:

செல்லப்பிராணிகள் அல்லது விலங்குகள் தற்போது COVID-19 ஐ பரப்பக்கூடும் என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை

COVID-19 நோயை கொசுக்கள் பரப்பவில்லை


இருப்பினும், கொசுக்கள் டெங்குவை (Dengue) பரப்பக்கூடும், இது மிகவும் ஆபத்தானது மற்றும் பெருகிவருகிறது!கொசு இனப்பெருக்கம் செய்வதைத் தவிர்க்கவும் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ளவும், தயவுசெய்து நடவடிக்கை எடுங்கள்.

COVID-19 ஐ உணவு மூலம் பரப்ப முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும் பெரிய குழுக்களாக ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

உணவு அல்லது பாத்திரங்களைப் பகிர்வதை நிறுத்துங்கள்.

சூடான நீரைக் குடிப்பதால் கிருமி அழியாது. ஆனால் அதிக சூடு உங்கள் தொண்டையை காயப்படுத்தும். 

சூடான குளியல் கிருமியை அழிக்காது. ஆனால் உங்கள் தோலை எரிக்கலாம். 

உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும். முகத்தை அடிக்கடி தொடுவதையும் நிறுத்துங்கள்.

COVID-19-ஐ தடுக்க பாரம்பரிய மருந்துகள் அல்லது உணவு எதுவும் இல்லை. சீரான ஆரோக்கியமான உணவை உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது, நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது விரைவாக குணமடைய உதவும், 

ஆண்டிபயாடிக்COVID-19 -ஐ குணப்படுத்த முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

COVID-19-ஐ குளோரோகுயின் / மலேரியா மருந்தால் குணப்படுத்த முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மருத்துவரின் ஆலோசனையின்றி குளோரோகுயின் / மலேரியா மருந்தை எடுக்கவேண்டாம். 

உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால், தயவுசெய்து ஒரு மருத்துவரை பார்க்கவும்.

தகவல் வழிகாட்டிகள் / சுவரொட்டிகள்
கட்டுக்கதைகள் மற்றும் பொய் வதந்திகளைப் பற்றி படிக்க: