நீங்கள் எங்கிருந்து உதவி பெறலாம்

வேலையிடக் காயப் பிரச்சினைகள்

சுருக்கமாக:

  1. வேலையிடங்களில் காயங்கள் ஏற்பட்டால், அது குறித்து அறிவிக்க வேண்டும்.
  2. மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
  3. மருத்துவ விடுப்பு சான்றிதழ்களை(MC) முதலாளியிடம் சமர்ப்பித்து அதற்கான ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
  4. மருத்துவ மதிப்பீட்டில் (வேலை இட காயம்) கலந்து கொள்ளுங்கள்.
  5. மதிப்பீட்டு அறிக்கைக்காகக் காத்திருங்கள்

வேலையிடத்தில் ஏற்படும் காயத்திற்கான இழப்பீடு பற்றிய ஊழியர் கையேடு:

https://www.mom.gov.sg/-/media/mom/documents/safety-health/publications/wic-guide-for-employees-tamil.pdf

உங்கள் வேலை தொடர்பான காயங்கள் குறித்து இழப்பீடு பெறும்தல் பற்றிய உங்கள் உரிமைகளை அறிவிக்கும் கையேடு.:

https://www.mom.gov.sg/-/media/mom/documents/safety-health/posters/poster-know-your-rights-to-compensation-tamil.pdf

சம்பளப் பிரச்சனைகள்

சுருக்கமாக:

  •  உங்கள் முதலாளி சம்பளம் கொடுப்பதைத் தாமதித்தால் அல்லது தேவையற்ற பிடித்தங்களைச் செய்தால், நீங்கள் MOM-யிடமிருந்து ஆலோசனையைப் பெறலாம்.
  • உதவி நாடி நீங்கள் பின்வரும் அமைப்புகளை அணுகலாம்:

உதவிக்கு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மையம்(MWC):

(+65) 6536 2692 எண்ணை அழைக்கவும்.

இடைக்கால அனுமதிபெற்ற ஊழியர்களும் முக்கியம்(TWC2).

உதவிக்கு, தொழிலார்களுக்கான ஹாட்லைன் எண் (+65) 6297 7564 -ஐ அழைக்கவும்.

ஹெல்த்சர்வ்:

மேல் விவரங்களுக்கு ஹெல்த்சர்வ் ஹாட்லைன் எண் (+65) 3157 4450 -ஐ தொடர்புகொள்ளுங்கள்.
நாங்கள் விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.