உங்கள் உரிமைகளை அறிந்துகொள்ளுங்கள்

ஹெல்த்ஸர்வ் பொதுவாக, வேலை அனுமதிச் சீட்டு (வொர்க் பர்மிட்,) சிறப்புப் பாஸில் இருக்கும் வெளி­நாட்டு ஊழியர்களுக்குச் சேவை வழங்குகிறது. இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல், நீங்கள் ஒரு சிறப்புப் பாஸ் அட்டை (special pass) அல்லது வேலை அனுமதிச் சீட்டு (work permit) வைத்திருப்பவர் என்றாலோ முதலாளி (employer) என்றாலோ, உங்கள் உரிமைகளை விவரிக்கும் வழிகாட்டியாக இருக்குமென்று நம்புகிறோம்.

எனக்கு என்ன தரப்படும்?

உணவு மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவது

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கென கட்டப்பட்ட விடுதிகளில் , 3 வேளை உணவு வழங்கப்படும். உணவு அவ்விடத்தை அடைந்த 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரத்திற்குள் பரிமாறப்படும். அரசாங்கம் ஊழியர் தங்கும் விடுதி இயக்குனர்களோடு சேர்ந்து நல்ல உணவு வழங்க ஊழியரை உணவை ருசிபார்க்க செய்தும் சமையல் வல்லுனர்கள் ஊழியர்களுளை சந்திக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. 

தங்குவிடுதியில், உள்ள மினி-மார்ட் என்ற பல்பொருள் கடைகள் திறந்திருக்கும். நீங்கள் இணையம் வழி ஆர்டர் செய்து அனுப்பும் சேவை பயன்படுத்திக்கொள்ளலாம்.தேவை அறிந்து கட்டப்பட்ட விடுதிகளில் நல்ல இணையச்சேவை (வைஃப்)  இருக்க வேண்டும். 410,000 பரிவு பொட்டலங்களை அரசாங்கம் விநியோகித்துள்ளதாக கூறுகிறது. அதில் முகக்  கவசம், வெப்பமானிகள், கையைச் சுத்தப்படுத்தும் கிருமிநாசினித் திரவம் ஆகியவை அதில் இருக்கும் . 200,000 டேட்டா சிம் அட்டைகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் எதாவது உங்களுக்கு கிடைக்காமல் இருந்தால் எங்களை வாட்ஸ்ஆப் வழியாக தொடர்பு கொள்ளவும்.

உங்கள் மொழியில் இலவச நிகழ்ச்சிகளை இங்கே காணலாம்:https://www.mewatch.sg/en/

சம்பளம் பெறுதல் மற்றும் வீட்டுக்கு பணம் அனுப்ப சேவைகளை வழங்குதல்

முதலாளிகள் தங்களின் ஊழியர்களின் சம்பளத்தை நேரத்துடன் வழங்க, மனிதவள அமைச்சு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.வங்கி பரிமாற்றம் மூலம் முதலாளிகள் சம்பளம் வழங்க வேண்டும். வங்கி கணக்கு கொண்ட ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சில முதலாளிகள் சம்பளம் கொடுப்பதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களுக்கு மனிதவள அமைச்சு உதவி வருகிறது. பொது நன்கொடைகளைப் பயன்படுத்தி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அமைச்சு உதவி வருகிறது.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குவதற்கென கட்டப்பட்ட விடுதிகளில் நீங்கள் தங்கி இருந்தால் பின்கூறப்படும்   POSB, State Bank of India, GCC Exchange, Mass Express and Pay2Home ஆகிய நிறுவனங்கள் மூலம் பணம் அனுப்பும் சேவைகள் விரைவில் கிடைக்கும். சிறப்பு ஏற்பாடாக சாவடிகள், அல்லது சுய சேவை கியோஸ்க்குகள் அல்லது பணத்தை அனுப்புவதற்கான மின் அனுப்புதல் சேவைகள் இருக்கும் உங்களுக்கு மேலும் உதவி தேவைப்பட்டால், முதலாளிகள் தங்கள் ஊழியர்களுக்காக பணம் அனுப்பலாம்  என்று அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க, தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சிப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.  மேலும் உங்களுக்கு சரியான கவனிப்பு இருப்பதையும் உறுதிசெய்யும்.

சிறப்பு பாஸ் வைத்திருப்பவர்கள்

 • ஒரு சிறப்பு பாஸ் (எஸ்.பி) அட்டை, வெளிநாட்டவரை சிங்கப்பூரில் தங்க அனுமதிக்கிறது

 • விசாரணைக்கு உதவுதல், வேலை தொடர்பில் ஏற்பட்ட காயம் அல்லது சம்பளம் தொடர்பான உரிமைகோரல்கள் போன்ற குறிப்பிட்ட நோக்கத்திற்காக இது வழங்கப்படுகிறது.

 • மனிதவள அமைச்சு (எம்ஓஎம்) மற்றும் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ஐசிஏ) மட்டுமே இத்தகைய எஸ்.பி. அட்டைகளை வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற அமைப்புகள்.

 • எஸ்.பி.க்கள் வழங்கப்பட்ட வெளிநாட்டவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை செய்ய அனுமதி இல்லை

 • வெளிநாட்டவர் சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பினால், அவர் MOM -இலிருந்து ஒர்க் பாஸ்-க்கு (work pass) விண்ணப்பிக்க வேண்டும்.

 • எஸ்.பி. அட்டைகளை வைத்திருப்பவர்கள் ஒரு செல்லுபடியாகும் ஒர்க் பாஸ் (work pass) இல்லாமல் வேலை செய்வது குற்றமாகும். மேலும் அவர்கள் சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் குற்றம் சுமத்தப்படுவர்.

 • அனைத்து எஸ்.பி. அட்டைகளுக்கும் செல்லுபடியாகும் தேதி உள்ளது.

 • உங்கள் சிறப்பு பாஸ் அட்டையை MOM (ஹால் சி) அல்லது ஐசிஏவில் புதுப்பிக்க வேண்டும்.

 • உங்கள் சிறப்பு பாஸ் கார்டை நீங்கள் தொலைத்துவிட்டால்,, நீங்கள் ஒரு போலீசிடம் தெரிவிக்க வேண்டும் என்பதுடன் MOM / ICA இல் மாற்று அட்டைக்கு விண்ணப்பிக்கவும் வேண்டும்.

வேலை அனுமதிச் சீட்டு (Work Permit) உள்ளவர்கள்

வேலை அனுமதிச் சீட்டு (Work Permit) வைத்துள்ளவர்கள் சிங்கப்பூரில் பணி புரியும் பொழுது, எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்று நாங்கள் மனிதவள அமைச்சின் இணையத்தளத்திலிருந்து சேகரித்திருக்கும் சில அடிப்படைத் தகவல்கள் :

 • உங்கள் வேலையைச் செய்ய நீங்கள் கட்டாயமாக, செல்லுபடியாகும் வொர்க் பாஸ்-ஐ வைத்திருக்க வேண்டும் என்பதுடன் ; கூடுதல் பணத்திற்காக இரண்டாவது வேலை பார்க்க அனுமதியும் இல்லை. விதிகளை மீறுவது கடுமையாம விளைவுகளுக்கு வழிவிடும். , அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
 • நீங்கள் பயன்படுத்தும் வேலைவாய்ப்பு நிறுவனம் உரிமம் பெற்றுள்ளதா என்று இங்கு அறிந்து கொள்ளலாம்:

https://service2.mom.gov.sg/eadirectory

 • சிங்கப்பூரில் நீங்கள் வேலைவாய்ப்பு நிறுவனத்தை நியமித்திருந்தால், , ஒவ்வொரு வருட ஒப்பந்தம் அல்லது வொர்க் பாஸிற்கும் ஒரு மாத சம்பளத்திற்கும் மேலாக நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிதில்லை.
 • முதலாளிகள், உங்கள் வேலையைப் பெற்றுத் தருதல், , ஒர்க் பாஸ்-ஐ புதுப்பித்தல், மருத்துவ காப்பீடு, வரி செலுத்துதல், மருத்துவ கட்டணம், கட்டாயப் பயிற்சிகள், திருப்பி அனுப்பும் செலவுகள் மற்றும் பாதுகாப்புப் பத்திரம் போன்றவற்றிற்கு உங்களிடமிருந்து பணத்தைக் கேட்பது சட்ட விரோதமானதாகும்..
 • வேலை விடுப்புகள் , முதலாளி வழங்கிய உணவுச் செலவுகள், தங்குமிடம்வசதிகள் மற்றும் சேவைகள், முன்பணம் மீட்பு, கடன்கள் அல்லது முன்பணத்தைத் திரும்ப்பெறுதல், கடன்கள் அல்லது சம்பளத்தை அதிகமாகக் கொடுத்ததைச் சரிக்கட்டுதல் வோன்றவற்றிற்கு மட்டுமே உங்கள் சம்பளத்தில் இருந்து கழித்துக்கொள்ள முடியும். பாதுகாப்பான தூர இடைவெளி சார்ந்த நடவடிக்கையில் ஒன்றான, நோய் முறிக்கும் நடவடிக்கையான சர்க்யூட் பிரேக்கரின் போது வேலை செய்ய முடியாத வெளிநாட்டு ஊழியர்களுக்கு, முதலாளிகள் அவர்களைப் பராமரிக்க,, பேண பொறுப்பேற்று, ஒப்புக் கொள்ளப்பட்ட சம்பளத்தை வழங்க வேண்டும். தொழிற்சங்கங்களுடனும் மற்றும் ஊழியர்களிடனும் இணைந்து, குறிப்பாக குறைந்த ஊதிய வேலை அனுமதி வைத்திருப்பவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்படும் சம்பளம் மற்றும் விடுப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.
 • சம்பள காலத்திற்குப் பிறகு, 7 நாட்களுக்குள் ஒவ்வொரு மாதத்தின் சம்பளத்தை தவறாமல் நீங்கள் பெறவேண்டும் .
 • நீங்கள் ஒவ்வொரு வாரமும் 44 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால், உங்கள் முதலாளி உங்கள் அடிப்படை சம்பளத்திலிருந்து 1.5 மடங்கு கூடுதல் நேர(ஓவர் டைம்) ஊதியத்தை உங்களுக்கு செலுத்த வேண்டும்.
 • உங்கள் முதலாளி வழங்கிய தங்குமிடம் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும இருப்பதுடன் அதிகமானோர் இருக்கவும் கூடாது. தனியார் வீடுகளில் 8 குடியிருப்பாளர்கள் மட்டுமே இருக்க முடியும்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கும் முதலாளிகளுக்கும் உறிய வளங்கள்

தகவல் வழிகாட்டிகள் / சுவரொட்டிகள்:

மேலும் தகவலுக்கு மனிதவள அமைச்சு வழங்கிய இந்த விரிவான வழிகாட்டியைப் படிக்கவும்:

https://www.mom.gov.sg/-/media/mom/documents/publications/foreign-workers/get-it-right-work-it-right-tamil.pdf

வேலைவாய்ப்பு முகமைகளைப் பற்றி:

முகமைக் கட்டணத்தைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்:

https://www.mom.gov.sg/-/media/mom/documents/publications/foreign-workers/agency-fee-know-the-limits.pdf?la=en&hash=7F78EC16F107A10333FE733911565179

உரிமம் பெற்ற வேலைவாய்ப்பு முகமை:

https://www.mom.gov.sg/-/media/mom/documents/publications/foreign-workers/no-licence-walk-away.pdf?la=en&hash=F6BED1B6B964406C6837E09BB565E603

உங்கள் வேலையைப் பற்றி – ஒரு வேலை அனுமதி, ஒரு வேலை:

https://www.mom.gov.sg/-/media/mom/documents/publications/foreign-workers/one-work-pass-one-job.pdf?la=en&hash=BC614505D627AC150763C02731ABA629

முதலாளியின் பொறுப்புகள்:

https://www.mom.gov.sg/-/media/mom/documents/publications/foreign-workers/my-employment-my-employer-pays.pdf?la=en&hash=E293908A4ED274A978FB28BDA7D548AE

சம்பளம் பெறுவது:

https://www.mom.gov.sg/-/media/mom/documents/publications/foreign-workers/salary-on-time-every-time.pdf?la=en&hash=DBF89D54FBD2BA44E03D628110CD3B0F

‘பணம்‌ செலுத்தி வேலை செய்வது’ இல்லை என்று கூறவும்‌:

https://www.mom.gov.sg/-/media/mom/documents/publications/foreign-workers/say-no-to-kickbacks.pdf?la=en&hash=90B4104477C6E1AE35AA82822347EC59

இழப்பீடு கோருவது:

பணிக்காலக் காய இழப்பீடிற்கான் வழிகாட்டி:

https://www.mom.gov.sg/-/media/mom/documents/safety-health/publications/wic-guide-for-employees-tamil.pdf

வேலையிடத்தில் காயப்பட்டால், இழப்பீடு கோருவதில் உங்கள் உரிமைகளை அறிந்துகொள்ளுங்கள்:

https://www.mom.gov.sg/-/media/mom/documents/safety-health/posters/poster-know-your-rights-to-compensation-tamil.pdf

மனிதவள அமைச்சின் உதவிக்கு:

https://www.mom.gov.sg/-/media/mom/documents/publications/foreign-workers/mom-can-help.pdf?la=en&hash=D26738BD29D311C328F844FEDF671D8B

முதலாளிகள்