ஹெல்த்செர்வ்-இன் சேவைகள்

 ஹெல்த்ஸர்வ் வெளி நாட்டு தொழிலாளர்களுக்கு நேரடியாகவும், அவர்களது முதலாளிகள் மூலமாகவும் உதவி செய்ய முனைகிறது. ஹெல்த்ஸர்வ், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களின் முதலாளிகள் மூலம் நேரடியாகவும் நம்பிக்கையுடனும் உதவ முயல்கிறது. அவ்வாறு, முடிந்தவரை சிக்கல்களைத் தீர்க்க உதவுவதற்கும், அர்த்தமுள்ள தொடர்புகள் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் தகவல்தொடர்புகள் மூலம் முதலாளிகள் தங்கள் ஊழியர்களைச் சென்றடைந்து உதவுவதற்கு ஒரு பாலமாக அமைகிறது.

வெளி நாட்டு ஊழியர் ஆதரவுத்திட்டம்

 வெளி நாட்டு ஊழிர்களுக்குக் காயம் ஏற்பட்டால் அல்லது சம்பளப் பிரச்சனை இருக்கும் சிரமமான காலத்தைக் கடந்துசெல்ல, ஹெல்த் ஸர்வ் பல்வேறு வகையான சேவைகளை அவர்களுக்கு வழங்குகிறது.

பொதுவான சேவைகள்:

 •  உணவுத் திட்டம் – உணவகப் பங்காளிகளுடன் இணைந்து, கலாச்சார ரீதியாகப் பொருந்தும் உணவை இலவசமாக அளிக்கிறது.
 • நிகழ்ச்சிகள், நடவடிக்கைகந் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகள்
 • உதவிச் சேவை வழி விசாராப்புகளைக் கேட்டல் மற்றும் ஆலோசனைகள்வழங்குதல்
 • மருத்துவ மற்றும் பல் மருத்துவச் சேவை

  Specific Services:

   
 • உங்கள் பிரச்சனைக் கையாளும் சேவைகள் – உங்கள் பிரச்சனைகள் குறித்த தொடர் நடவடிக்கைகளில் எங்களால் உதவ முடியும்.

 • ஆலோசனைச் சேவைகள்

 • புனர்வாழ்வுச் சேவைகள்

 • பணம் நிரப்பும் (டாப் அப்) மற்றும் நிதி உதவி

 • பிரச்சனைகளைக் குழுவாகத் தீர்க்கும் நிகழ்ச்சிகள்

 • சிறப்புப் பரிந்துரைகள் செய்து சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்பிவைத்தல்

 • மருத்துவமனைக்குச் செல்லுதல் – மொழி பெயர்ப்பு அல்லது தார்மீக ஆதரவிற்காக, நாங்கள் உங்களோடு மருத்துவமனைக்கு வர முடியும்.

 • மருத்துவமனை/நர்ஸிங்க் ஹோம் சென்று பார்த்துவர உதவி

 • ட்றாப் இன் நிலையங்கள் – சமூகத்தோடு தொடர்பு கொள்ளவும், இலவச வைஃஐ உடன், ஊரில் உள்ள உங்கள் குடும்பத்தோடு தொடர்பு கொள்ள அமைக்கப்பட்ட நிலையம் .

சர்க்யூட் ப்ரேக்கரினால் (நோய் முறிப்பு நடவடிக்கையால்) இந்த ட்றாப் இன் நிலையங்கள் மூடப்ப்ட்டுள்ளன. எனினும், உங்கள் முதலாளியிடமிருந்து உதவி உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், உங்கள் பிரச்சனைக்கு எங்களால் தொடர்ந்து உதவி செய்ய முடியும்.

விவரங்களுக்கு ஹெல்த்சர்வ் ஹாட்லைன் எண் +65 3157 4450 -ஐ தொடர்புகொள்ளுங்கள்..
நாங்கள் விரைவில் உங்களைத் தொடர்புகொள்வோம்.

முதலாளிகளின் ஆதரவு